"நான் கேட்டு தாய் தந்தை படைத்தாரா... இல்லை என் பிள்ளை என்னை கேட்டு பிறந்தானா...தெய்வம் செய்த பாவம் இது போடி தங்கச்சி... கொன்றால் பாவம் தின்றால் போச்சு இது தான் என் கட்சி.."
"எங்கே வாழ்கை தொடங்கும்... அது எங்கே எவ் விதம் முடியும்...இதுதான் பாதை இது தான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது..பாதை எல்லாம் மாறி விடும் பயணம் முடிந்து விடும்....மாறுவதைப் புரிந்துகொண்டால் மயக்கம் தெளிந்துவிடும்...."
"மலரும் வான் நிலவும் சிந்தும் அழகெல்லாம் உன் எழில் வண்ணமே..
குழலும் யாழ் இசையும் கொஞ்சும் ஒலி எல்லாம் உன் குரல் வண்ணமே.."
"காவியத் தாயின் இளைய மகன்...காதல் பெண்களின் பெருந் தலைவன்...
பாமர ஜாதியில் தனி மனிதன்... நான் படைபதினால் என் பெயர் இறைவன்.."
"கன்னி தமிழ் தந்ததொரு திருவாசகம்..கல்லை கனி ஆக்கும் உந்தன் ஒரு வாசகம்..உண்டென்று சொல்வது உன் கண்ணல்லவா... வண்ண கண்ணல்வா
இல்லை என்று சொல்வது உன் இடை அல்லவா..மின்னல் இடை அல்லவா "
"நான் பார்த்த பெண்ணை நீ பார்கவில்லை....நீ பார்த்த பெண்ணை நான் பார்கவில்லை..உன் பார்வை போலே என் பார்வை இல்லை... நான் கண்ட கட்சி நீ காணவில்லை..
என் விழியில் நீ இருந்தால்...என் விழியில் நீ இருந்தால்
உன் வடிவில் நான் இருந்தேன்...உன் வடிவில் நான் இருந்தேன்
நீ இன்றி நான் இல்லை நான் இன்றி நீ இளையே..."
"ஊமை என்றல் ஒருவகை அமைதி.... ஏழை என்றல் அதில் ஒரு அமைதி"
---- நான் மேலே கூறியுள்ளவை கண்ணதாசன் அவர்களின் கவிப் புலமையின் சிறிய எடுத்துக்காட்டே என்றாலும்...என்னை பொறுத்த மட்டும், இவைகளையே நான் மிக சிறந்தவையாக கருதுகிறேன்.
"நான் நிரந்தரமானவன் அழிவதில்லை.... எந்த நிலையிலும் எனக்கு மரணம் இல்லை"
உண்மை! அவர் நிரந்தரமாணவர்!
No comments:
Post a Comment